கொரோனா வைரசை பரப்பி, எல்லா நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்திய சீனாவை, ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும்' என, அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தி உள்ளார்.
அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரிக் ஸ்காட், அமெரிக்க வெளியுறவுக்கான செனட் குழுவுக்கு எழுதி உள்ள கடிதத்தில், கொரோனா வைரசை பரப்பியது தொடர்பாக சீனாவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், ஒலிம்பிக் போட்டியில் இருந்து சீனாவை நீக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகார குழு, கொரோனா தொற்று உருவான விதம் குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் வெளிப்படையற்ற, தவறான செயல்பாடுகளால், கொரோனா பரவியதாவும், சீனா செய்த குற்றங்களுக்கு பொறுப்பேற்க வைப்போம் என்றும் கூறப்பட்டுள்ளது.