கொரோனா வைரஸ், மனித தோலில், 9 மணி நேரம் வரையில், உயிர்ப்புடன் இருக்கும் என ஜப்பான் நாட்டின் மருத்துவ குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கியோட்டா மருத்துவ பல்கலைக்கழக குழுவினர், நடத்திய ஆய்வில், அடிக்கடி, கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுவதன் மூலம், சானிடைசர் கொண்டு தூய்மைப்படுத்திக் கொள்வதன்மூலம், கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து, நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என தெரியவந்துள்ளது.
தரமான சானிடைசர் கொண்டு, தூய்மைப்படுத்தும்போது, மனித தோலில் உள்ள கொரோனா வைரஸ் தனது செயல் திறனை முற்றாக இழந்துவிடுவதாகவும், ஜப்பான் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.