உலக வர்த்தக அமைப்பின் புதிய தலைவராக முதல் முறையாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இந்த அமைப்பின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதிச் சுற்றுக்கு 2பெண்கள் தேர்வாகி உள்ளனர். அவர்களில் ஒருவரான நைஜீரிய முன்னாள் நிதியமைச்சர் கோஸி ஒகேஞ்சோ-இவியாலா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர் ஆவார்.
இன்னொருவர் தென் கொரிய வர்த்தகத் துறை அமைச்சர் யூ மியங்-ஹீ ஆவார். 1995-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நாடுகளிடையிலான வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வரிகளைக் கட்டுப்படுத்தி வருகிறது. இந்த அமைப்பில் 164 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.