ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆகஸ்ட்டில் விமானத்தில் செல்லும் போது உடல் நலம் பாதிக்கப்பட்ட அலெக்ஸி நவல்னிக்கு, நோவிச்சோக் விஷம் கொடுக்கப்பட்டதை சர்வதேச ரசாயன ஆயுதக் கண்காணிப்புக் குழு உறுதி செய்தது.
இதில், ரஷ்ய அரசுக்கு பங்குள்ளதாக குற்றஞ்சாட்டி பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.