பிரேசிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனித்தனி கண்ணாடி அறைகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள உணவகம் சிறப்பு கவனத்தை பெற்றுள்ளது.
ரியோ டி ஜெனிரோ நகரில் கலாச்சார வளாகம் ஒன்றிற்கு வெளியே அமைந்துள்ள சுஷி தாஸ் ஆர்ட்ஸ் என்ற உணவகத்தில், கண்ணாடி மற்றும் மரச்சட்டங்களை கொண்டு தனித்தனியாக சிறிய 30 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அறையிலும் தலா 4 பேர் அமரும் வகையில் ஏரியின் விளிம்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகம், ரம்மியமான மற்றும் பாதுகாப்பான சூழலை தருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.