கடலடி ஆய்விற்காக தண்ணீரை உறிஞ்சி தானாக இயங்கும் ஸ்குவிட் மீன் போன்ற ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் சான்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் தயாரித்துள்ள இந்த ரோபோவுக்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ரோபோ ஜெட் விமானங்களைப் போல தண்ணீரை உறிஞ்சி பின்னுக்குத் தள்ளி, தானாகவே இயங்கும் தன்மை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் வடிவமைப்பு காரணமாக மீன் மற்றும் பவளப்பாறைகளுக்கு சேதம் விளைவிக்காமல் படம் பிடிக்கும் தன்மை கொண்டது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.