அமெரிக்கா அரசு எச்-ஒன் பி விசாக்களை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ள தொழில் முறை விசாவுக்கான புதிய கட்டுப்பாடுகளின்படி, ஆண்டுக்கு இனிமேல் 85,000 எச்-ஒன் பி விசாக்கள் மட்டுமே வழங்கப்படுமென கூறப்பட்டுள்ளது.
இதில் 65,000 விசாக்கள் சிறப்பு தொழில் திறன் பெற்றவர்களுக்கும், 20,000 விசாக்கள் அமெரிக்காவில் உயர் பட்டப்படிப்பை முடித்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக உள்நாட்டில் திறமையானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்குமென உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் சாட் வுல்ப் தெரிவித்துள்ளார்.