பிரிட்டனில் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்று அந்நாட்டு பிரதமர் போரீஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றன. பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, மிகப்பெரிய மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகாவுடன் (AstraZeneca) இணைந்து உருவாக்கியுள்ள மருந்து முன்னணியில் இருப்பதாக கூறியுள்ள போரீஸ் ஜான்சன், இறுதிக்கட்ட பரிசோதனையில் ஆஸ்ட்ராஜெனிகா மருந்து இருப்பதாக தெரிவித்தார்.