இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாட்டு வெளியுறவுஅமைச்சர்கள் பங்கேற்கும், குவாட் நாடுகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
டோக்கியோவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், இந்திய-பசிபிக் மட்டுமின்றி யூரோஏசியா பகுதியிலும் தனது ராணுவ-பொருளாதார வலிமையை காட்டி, ஆதிக்கம் செலுத்த முயன்று வரும் சீனாவின் நடவடிக்கையை தடுப்பது குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பூசி, இணையப் பாதுகாப்பு, தொழில்நுட்பங்கள், உட்கட்டமைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, மண்டல ஒத்துழைப்பு ஆகியன பற்றியும் கூட்டத்தில் பேச்சு நடத்தப்பட உள்ளது.