கிழக்கு சீனாவின் Zhejiang மாகாணத்தில் அமைந்துள்ள குயிண்டியாங் ஆற்றில் எழுந்த 10 அடி உயரத்திலான ராட்சத அலைகள் காண்போரை வியக்க வைத்தது.
அந்நாட்டின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான குயிண்டியாங் ஆறு, முகத்துவாரமான ஹைனிங் நகரை அடையும் போது தனது போக்கை பிரமாண்டமாக விரிவாக்கி கொள்கிறது.
அப்போது ஆற்றில் எழும் ராட்சத அலைகளை ஏராளமானோர் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், இந்த ஆண்டு Y வடிவில் 10 அடி உயரத்திற்கு சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தன.
இந்த அலைகள் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் ஈர்ப்பு விசையால் எழுவதாக கூறப்படுகிறது.