மெக்சிகோவில், 52 ஆண்டுகளுக்கு முன், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியின் போது, மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
1968 ஆம் ஆண்டு, மெக்சிகோவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அரசு அதிக நிதியை ஒதுக்கியதை கண்டித்து, மாணவர்கள் நடத்திய பேரணியின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு நீதி வழங்க வலியுறுத்தி நடைபெற்ற பேரணியை தடுத்து நிறுத்திய போலீசார் மீது மாணவர்கள் கற்களை வீசினர்.
போலீசார் பதிலுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.