சீனாவில் 8 நாட்கள் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளியன்று ஒரேநாளில் பத்துக் கோடியே 80 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள சீனாவில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
அங்கு அக்டோபர் 1 தேசிய நாளாகக் கடைப்பிடிக்கப்படும் நிலையில் அதற்காகத் தொடர்ந்து 8 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டிப் பணிபுரியும் இடங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா இடங்களுக்கும் வெள்ளியன்று மட்டும் சாலை வழியாகவும், ரயில், விமானப் போக்குவரத்திலும் மொத்தம் 10 கோடியே 80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.