அர்ஜென்டினாவில் பேருந்து ஓட்டுனர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மூண்டதில் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
Buenos Aires சின் புறநகர் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் எல்லாம் மூடப்பட்டன. தங்களுடைய சக பேருந்து ஓட்டுனர் ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து மற்ற பேருந்து ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைதியாக தொடங்கிய இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியது. அப்போது பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
போலீசார் பதிலுக்கு கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களால் சுட்டு போராட்டக்கார ர்களை அப்புறப்படுத்தினர்.