ஐநா.சபையில் மகாத்மா காந்தியின் பிறந்ததினம் அகிம்சை தினமாக கொண்டாட்டம்
ஐநா.சபையில் மகாத்மா காந்தியின் பிறந்ததினம் அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டதை ஒட்டி பேசிய இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, அகிம்சை வழியில் செல்லவும் உண்மையை மதிக்கவும் இந்தியா உறுதி கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
உண்மையை பாதுகாக்க அகிம்சையை சிறந்த ஆயுதமாகப் பயன்படுத்த நாம் பழக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இன்றைய எரியும் பிரச்சினைகளுக்கு அகிம்சை தான் தீர்வாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.