கொரோனா அச்சுறுத்தலால், ஆஸ்திரேலியாவிற்கு வெளிநாட்டினர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 16 ஆம் தேதி முதல் நியூசிலாந்து நாட்டினர் ஆஸ்திரேலியா வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
40 நாட்களுக்கு மேலாக நியூசிலாந்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாததால், அங்கிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டர்கள் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அதே சமயம் ஆஸ்திரேலியா சென்று விட்டு நியூசிலாந்து திரும்புபவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என நியுசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.