ஆஸ்திரேலியாவில் அலைசறுக்கு விளையாட்டு வீரர்களுக்கு இடையே 2 பிராம்மாண்ட திமிங்கலங்கள் உலாவியதன் ட்ரோன் காட்சி வெளியாகி உள்ளது.
பைரன் விரிகுடாவிற்கு அருகே உள்ள செவன் மைல் கடற்கரையோரம், சுமார் 12 மீட்டர் நீளம், 12 முதல் 20 டன் எடை கொண்ட 2 திமிங்கலங்களை புகைப்படக் கலைஞர் டேனியல் குக் காட்சிப்படுத்தி உள்ளார்.
நீருக்கடியில் சிறிய மீன்களை திமிங்கலங்கள் வேட்டையாடி கொண்டிருந்த நிலையில், அலையேற்ற பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருந்த காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.