காலநிலை இளம் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், அமைதிக்கான நோபல் பரிசு போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.
நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அக்டோபர் 9 ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான போட்டியாளர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவில் முஸ்லீம் உய்குர் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக போராடி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இல்ஹாம் தோஹ்தி, ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வெளியிட்ட ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லோன் மற்றும் க்யாவ் சோ ஓ உள்ளிட்டோர் பட்டியலில் உள்ளனர்.