பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் தானியங்கி ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக அதிக சப்தத்துடன் சாலைகளை சுத்தம் செய்யும் கனரக எந்திரங்களை போன்று இல்லாமல், அமைதியான முறையில் இயங்கக்கூடிய தானியங்கி ரோபோவை டிராம்பியா என்ற பின்லாந்து நிறுவனம் வடிவமைத்துள்ளது.
ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள எட்டு இடங்களில் இந்த ரோபோ சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டில் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்றும் டிராம்பியா நிறுவனம் தெரிவித்துள்ளது.