கிரீஸில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது.
அந்நாட்டில் கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வகுப்பறைக்குள் குறைந்த அளவில் மாணவர்களை அனுமதிக்கவும் தனிநபர் இடைவெளியை அமல்படுத்தவும் வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.
அந்த வகையில், தலைநகர் ஏதென்ஸில் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் அப்புறப்படுத்தினர்.