ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சீ நவல்னி, தனக்கு நஞ்சூட்டப்பட்டதற்குப் பின்னால் அதிபர் விளாடிமிர் புடின் உள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புடின் அரசைக் கடுமையாக எதிர்த்த அலெக்சீ நவல்னி விமானத்தில் வந்தபோது மயக்கமடைந்தார்.
அவரை ஜெர்மனிக்குக் கொண்டுசென்று பெர்லின் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
தேநீரில் நஞ்சு கலந்து அவருக்குக் கொடுக்கப்பட்டதாக ஆதரவாளர்கள் கூறும் குற்றச்சாட்டை ரஷ்ய அரசு மறுத்துள்ளது.
32 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ள நவல்னி, ஜெர்மனி இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், தனக்கு நஞ்சூட்டப்பட்டதற்குப் பின்னால் புதின் இருப்பதாகவும், இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.