பல்லுயிர் பாதுகாப்பிற்கான அவசர நடவடிக்கைகளுக்கு ஐ.நா. சபையின் மூத்த அதிகாரிகளும் உலகத் தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பான உச்சிமாநாட்டில் தொடக்க உரையாற்றிய ஐ.நா. 75 வது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திறனை பொறுத்தே பூமியில் மனிதர்களின் இருப்பு உள்ளதென கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும், ஒரு கோடி 30 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுவதாகவும், 10 லட்சம் உயிரினங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதெனவும் கடந்த 50 ஆண்டுகளில் முதுகெலும்பு விலங்குகளின் எண்ணிக்கை 68 சதவீதம் குறைந்துள்ளதெனவும் போஸ்கிர் கூறினார்.