கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் தியாகங்களை செய்ய முன்வரவேண்டும் என, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.
லண்டனில் மாநாடு ஒன்றில் பேசிய அவர், நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் இங்கிலாந்து முக்கிய தருணத்தில் உள்ளதாக குறிப்பிட்டார்.
தேவைப்பட்டால் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும், அதை தவிர்க்க வேண்டும் என்றால் பொதுமக்கள் கூட்டு சகிப்புத் தன்மை கொண்டு பொதுஇடங்களில் கட்டுப்பாடுகளுடன் செயல்படுவதோடு, சில தியாகங்களையும் செய்ய முன்வர வேண்டும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.