இங்கிலாந்தில் ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்திப் பார்க்கப்பட்டது.
இங்கிலாந்தில் கடந்த வாரம் சிறிய ரக விமானம் ஒன்று ஹைட்ரஜன் சோதனையில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பிராந்தியத்தில் உள்ள லாங் மார்ஸ்டன் மற்றும் ஈவ்ஷாம் ஆகிய நகரங்களுக்கு நடுவே ஹைட்ரஜன் சக்தி ரயில் இயக்கப்பட்டது.
ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை இணைத்து மின்சாரம், வெப்பம் மற்றும் நீரை உருவாக்கி இயக்கப்படுவதால் இந்த ரயிலில் புகைக்கு பதிலாக நீராவி வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான சோதனை ஓட்டத்தில் இந்த ரயில் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.