கொரோனா கால மரணங்களின் உண்மையான எண்ணிக்கையை, சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் வெளியிடுவதில்லை, என அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் பொது விவாதத்தில் பங்கேற்று பேசிய பிடன் 70 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பெருந்தொற்று பரவலைத் தடுக்க, அதிபர் டிரம்ப் நிர்வாகத்திடம் இதுவரையில், எந்த திட்டமும் இல்லை என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், கொரோனா மரணங்கள் தொடர்பான உண்மையான எண்ணிக்கையை, சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கூட வெளியிடுவதில்லை எனக் கூறியுள்ளார்.