போட்ஸ்வானாவைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் ஒரு வகை பாக்டீரியா நோயால் முப்பதுக்கு மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன.
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் முந்நூற்றுக்கு மேற்பட்ட யானைகள் மர்ம நோயால் உயிரிழந்தன. இதையடுத்து அண்டை நாடான ஜிம்பாப்வேயிலும் ஆகஸ்டு,செப்டம்பர் ஆகிய இரு மாதங்களில் 34 யானைகள் இறந்தன.
ஹேமராஜிக் செப்டிகேமியா என்கிற ஒருவகை பாக்டீரியா நோயால் யானைகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இறந்த யானைகளின் ஈரல் மற்றும் உறுப்புகள் வீங்கியிருந்ததாகவும், இவற்றின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே யானைகள் இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் வன விலங்குகள் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.