சீனாவில் மழலையர் பள்ளிக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த வழக்கில் ஆசிரியைக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோஸூவோ என்ற இடத்தில் உள்ள மழலையர் பள்ளியில் வாங் யூன் என்பவர் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் திடீரென வாந்தி எடுத்து, மயக்கமடைந்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவைச் சோதித்த போது அதில் விஷம் கலக்கப்பட்டிருந்தும், அதனை வாங் யூன் வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தற்போது வாங் யூனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.