அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வரலாறு காணாத அளவு 37 லட்சத்துக்கும் அதிகமாக ஏக்கர் வனப்பகுதி காட்டுத்தீயில் எரிந்து நாசமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் முதல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீ காரணமாக, 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், சோனோமா மற்றும் நாபா மாவட்டங்களில் காட்டுத்தீ தீவிரமடைந்து வருவதால் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
திராட்சை தோட்டங்களுக்கு புகழ்பெற்ற நாபா பள்ளதாக்கில் காட்டுத்தீயை சிறிய விமானங்கள் உதவியுடன் அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.