மெக்சிகோவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெக்சிகோவில் பாலியல் பலாத்காரம், மருத்துவ காரணங்களை தவிர்த்து கருக்கலைப்பு செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச பாதுகாப்பான கருக்கலைப்பு தினத்தை முன்னிட்டு தலைநகரில் கூடிய ஏராளமான பெண்கள், சுத்தியல்கள், பாட்டில்களை கொண்டு கட்டிட கண்ணாடிகளை உடைத்தனர்.
அவர்களை கண்ணீர்புகை குண்டு வீசி போலீசார் தடுக்க முயன்றதால் கலவரம் வெடித்தது.