விமானம் மற்றும் விமான நிலையங்களில் லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன் எனும் வார்த்தை, இனி பயன்படுத்தப்பட மாட்டாது என, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாலின வேறுபாடுகளை தவிர்க்கும் நோக்கில், வாடிக்கையாளர்களின் கருத்தை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, அடுத்த மாதத்தில் இருந்து விமானம் மற்றும் விமான நிலையங்களில் வெளியாகும் அறிவிப்புகளில், குட் மார்னிங், குட் ஈவ்னிங் போன்ற வாசகங்கள் மட்டுமே இடம்பெறும் என, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.