ஏழை மற்றும் நடுத்தர நாடுகளுக்கு, 12 கோடி கொரோனா ரேபிட் டெஸ்ட் கருவிகள் வழங்கப்படும் என, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்திற்கு, தங்களது கூட்டு நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக பேசினார்.
இதன் மூலம், பரிசோதனைக் கூடங்கள் அமைப்பதற்கு போதிய வசதிகள் இல்லாத மற்றும் பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ள பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாத பகுதிகளிலும் கூட, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.