அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் பத்தாண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்று நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
தமது தொழில்களில் பலத்த இழப்பை சுட்டிக் காட்டி கடந்த சில ஆண்டுகளில் அவர் குறைந்த அளவிலேயே வரிகளை செலுத்தியிருப்பதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
2016-17 ஆண்டில் அவர் 750 டாலர் மட்டுமே வரி செலுத்தியுள்ளார் என்றும் கடந்த 15 ஆண்டுகளில் பத்தாண்டுகளில் அவர் வரியே செலுத்தவில்லை என்றும் வருமான வரி ஆவணங்களின் அடிப்படையில் தகவல் வெளியாகியுள்ளது.
இது தவறான செய்தி என்று இதற்கு டிரம்ப் மறுப்புத் தெரிவித்துள்ளார். பல மில்லியன் டாலர் வரி செலுத்தியிருப்பதாக டிரம்ப் சார்பில் அவர் வழக்கறிஞர் ஆலன் கார்ட்டன் விளக்கம் தெரிவித்துள்ளார்.