போர்ச்சுகலில் கொரோனா அச்சுறுத்தலால் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதம் 4 லட்சமாக உயர்ந்துள்ள வேலையின்மை, சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள அல்கார்வ் பிராந்தியத்தில் மட்டும் 177 சதவீதம் அதிகரித்துள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு தீர்வாக தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்கு பதிலாக வேலை நேரத்தை குறைப்பதற்கான திட்டத்தை அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை எனக்கூறி போராட்டம் நடந்தது.