ரஷ்யாவில் தாயால் கைவிடப்பட்ட சிங்கக்குட்டிகளுக்கு நாய் ஒன்று பாலூட்டி பாசத்துடன் வளர்த்து வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
விளாடிவோஸ்டாக் நகரில் உள்ள சர்க்கஸில் வளர்க்கப்பட்டு வந்த வெள்ளைச் சிங்கம் இரு குட்டிகளை ஈன்றது. முதலில் கனிவுடன் குட்டிகளை வளர்த்த அந்தச் சிங்கம், பின்னர் தான் ஈன்ற குட்டிகளையே கொல்ல முயன்றது.
இதனால் குட்டிகளை மீட்ட சர்க்கஸ் நிர்வாகிகள், அதனை ஜெர்மன் ஷெப்பர்டு நாயிடம் ஒப்படைத்தனர்.
அதன் பின்னர் நிர்வாகிகளே ஆச்சரியப்படும் அளவிற்கு சிங்கக் குட்டிகளை அந்த நாய் பாலூட்டி வளர்த்து வருகிறது.