அமெரிக்காவில், சீன பத்திரிக்கையாளர்கள் தங்குவதற்கான விசா கட்டுப்பாடுகளை மேலும், 90 நாட்களுக்கு நீட்டித்து, அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
சீனா குறித்த செய்திகளை தவறாக சித்தரித்து வெளியிட்டதாக கூறி, பீஜிங் உள்ளிட்ட இடங்களில் பணியில் இருந்த அமெரிக்க பத்திரிக்கையாளர்கள் சிலரை, சீனா வெளியேற்றியது.
அமெரிக்காவில் சீன பத்திரிக்கையாளர்கள் தங்க, 90 நாட்கள் மட்டுமே விசா வழங்கப்படும் என கடந்த மே மாதம் அறிவித்து, டிரம்ப் நிர்வாகம் நடைமுறைப்படுத்தியது. இந்நிலையில், சீன பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான, விசா காலக்கெடுவை, மேலும் 90 நாட்களுக்கு மட்டும் நீட்டிப்பதாக அறிவித்திருக்கிறது.