உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால் கொரோனா வைரசுக்கு 20 லட்சம் பேர் பலியாக கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் அவசர கால மருத்துவ நிபுணர் மைக் ரியான், உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் கொரோனாவால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்றார்.
இதுவரை உலக அளவில் கொரோனா தொற்றால் 10 லட்சம் பேர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய அவர், குளிர்காலம் தொடங்குவதால் பல நாடுகளில் கொரோனாவின் 2-வது அலை தொடங்கி உள்ளது என்றார். கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மேம்பட்டு உள்ளதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளன என்றும், ஒன்று பட்டு செயல்படாவிட்டால்
20 லட்சம் பேர் வரை உயிரிழப்பதை தடுக்க இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.