5ஜி மற்றும் 5ஜி பிளஸ் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்படத் தீர்மானித்துள்ளன.
ஜப்பானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள யோசிகிடே சுகாவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்.
அப்போது, 5ஜி மற்றும் 5ஜி பிளஸ் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் தொழில்நுட்ப உதவியைப் பெற தீர்மானித்துள்ளதாக அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த தலைமுறை தொலைத்தொடர்புத் தொழில்நுட்ப மேம்பாடு குறித்து ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.