எச்ஐவி தொற்று குணமாகி மீண்ட முதல் மனிதரான திமோத்தி ரே பிரவுன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கரான திமோத்தி ரே பிரவுன் ஜெர்மனியில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியபோது அவருக்கு எச்ஐவி தொற்று இருந்தது தெரியவந்தது.
தொற்று பாதித்த நிணநீரை மாற்றிப் பிறரிடம் இருந்து பெற்ற தொற்றில்லா நிணநீரை அவருக்குச் செலுத்தும் சிகிச்சை இருமுறை செய்யப்பட்டது.
இதன்மூலம் அவருக்கு எச்ஐவி தொற்று முழுவதும் குணமானது.இந்த நிலையிவ்ல அமெரிக்காவின் பாம்ஸ்பிரிங் என்னும் ஊரில் வாழ்ந்து வரும் திமோத்தி தொடர் சிகிச்சையின் விளைவாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.