ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து வலிமையான எதிர்ப்பாற்றலை உருவாக்குவது தொடக்கச் சோதனைகளில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. இந்த மருந்தை முதலில் ஆயிரம் பேருக்குச் செலுத்திச் சோதிக்கப்பட்டது.
அந்தச் சோதனையின் இடைக்கால முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இந்த மருந்து வலிமையான எதிர்ப்பாற்றலை உருவாக்குவது தெரியவந்துள்ளது.
தடுப்பு மருந்தைச் செலுத்தியவர்களுக்கு நோய்க்கிருமிகளிடம் இருந்து செல்களைக் காக்கும் ஆன்டிபாடி உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்தின் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்த விவரங்கள் ஆய்வின் முடிவில்தான் தெரியவரும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.