உலகளவில் கொரோனா தடுப்பூசி பரவலாக கிடைப்பதற்குள், கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 9 மாதங்களில் சுமார் 10 லட்சம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், அடுத்த 9 மாதங்களுக்குள் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவசரகால திட்ட இயக்குனர் மைக் ரியான் தெரிவித்துள்ளார்.
மேலும் இது, தடுப்பூசி தயாரிப்புப் பணியில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிக பெரிய சவால் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.