போலந்து எல்லையில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்கள் விமானங்களில் இருந்து பாராசூட் மூலம் குதித்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.
பெலாரஸ் நாட்டின் பிரஸ்ட் பகுதியில் ஸ்லாவிக் பிரதர்ஹுட் (Slavic Brotherhood) எனும் பெயரில் இருநாட்டு ராணுவத்தினரும் 15ம் தேதி முதல் கூட்டு ஒத்திகை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக பாராசூட் மூலம் குதித்து ஒத்திகை நடத்திய வீடியோவை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த ஒத்திகையில் ரஷ்யா, பெலாரஸ் நாடுகளை சேர்ந்த தலா 250 பாராசூட் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.