கடின உழைப்பாலும், தொழில் முயற்சிகளாலும், அமெரிக்க இந்தியர்கள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூறியுள்ளார்.
அதிபர் தேர்தலுக்காக அங்குள்ள இந்தியர்கள் ஏற்பாடு செய்த டிஜிட்டல் நிதி திரட்டும் நிகழ்வில் பேசிய அவர், அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகம் பெருமளவில் தேர்தல் நிதி அளிப்பதை சுட்டிக்காட்டிய அவர், தாம் பதவிக்கு வந்த பிறகு H-1B விசா மற்றும் சட்டபூர்வ குடியேற்றம் குறித்த இந்தியர்களின் கவலைகள் போக்கப்படும் என உறுதி அளித்தார்.
உலகின் மிகவும் செல்வாக்கான பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்புக்களை இந்திய சமூகம் அலங்கரிப்பதாக கூறினார்.