இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான், தனது செயலியில் தமிழ் உள்பட 4 இந்திய மொழிகளை புதிதாக இணைத்துள்ளது.
பண்டிகை காலம் வருவதை கருத்தில் கொண்டும், இந்தியாவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. அமேசான் செயலியில் இதுவரை ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் மட்டுமே சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அந்த செயலியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.