ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பு ஸ்புட்னிக்-வீ மருந்து நம்பகமானது, தரமானது, அனைத்துவிதமான தரப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.
ஐநா.சபையின் 75வது ஆண்டு விழாவில் காணொலி வாயிலாக உரை நிகழ்த்திய புதின் தங்கள் மருந்து தயாரிப்பு அனுபவத்தை அனைத்து உலக நாடுகளுடனும் பகிர்ந்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஐநா.சபையின் தலைமையகம், மண்டல அலுவலகங்கள் என்ற பல இடங்களிலும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதை புதின் சுட்டிக் காட்டினார். இந்த மருந்தை ரஷ்யாவுடன் இணைந்து உற்பத்தி செய்ய விரும்பும் நாடுகளுக்காக விரைவில் பெரிய அளவில் மாநாடு ஒன்றை நடத்த இருப்பதாகவும் புதின் தெரிவித்தார்.