தற்போது சோதனையில் உள்ள தடுப்பூசிகள் கொரோனாவிற்கு எதிராக செயல்படும் என்பதற்கு, உத்தரவாதம் இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உலக அளவில் சுமார் 200 மருந்துகள் மருத்துவ மற்றும் அதற்கு முன்னதான சோதனையில் உள்ளதாகவும், அதிகப்படியான சோதனைகள் மூலமே பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்துள்ள கோவாக்ஸ் திட்டம், கொரோனா பேரிடரைக் கட்டுக்குள் கொண்டுவரவும், பொருளாதார மீட்சியை அதிகரிக்கவும் உதவும் என, டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.