கொரோனா அச்சுறுத்தலால் தொலைதூரத்தில் இருந்து பணியாற்றும் ஊழியர்களின் திறனைக் கண்டு ஈர்க்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றினாலும், கடிகாரங்கள், ஐபாட்கள் உள்ளிட்ட தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனம் உரிய நேரத்தில் அறிமுகப்படுத்தியதாக தி அட்லாண்டிக் நிகழ்ச்சியின் நேர்காணலில் டிம் குக் கூறினார்.
கொரோனா தாக்கத்தால் வேலை நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சில நிரந்தமாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.