மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸில் (Honduras) ஒமோவா கடற்கரைகள், பிரம்மாண்ட குப்பை படலங்களால் அழகை இழந்துள்ளன.
அண்டை நாடான கவுதமாலாவில்(Guatemala) உள்ள மோட்டாகுவா ஆற்றில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகள் மிதந்து வந்து கடற்கரையோரங்களில் தேங்கி உள்ளதாக கூறும் அதிகாரிகள், இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளைச் சார்ந்த கடற்கரைகளை பொருளாதார ரீதியாக பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கவுதமாலா அரசுக்கு புகார் அனுப்பி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.