போட்ஸ்வானாவில் நச்சுத்தன்மை கலந்த நீரை அருந்தியதே 300க்கும் மேற்பட்ட யானைகளின் மரணத்திற்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இங்கு கடந்த மே மாதம் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக மர்மமான முறையில் உயிரிழந்தன. இதனையடுத்து அங்குள்ள நீர்நிலைகளில் சோதனையிட்ட ஆராய்ச்சியாளர்கள், சயனோபாக்டீரியா என்னும் நச்சுப்பொருள் நீரில் உற்பத்தியானதை கண்டறிந்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் உற்பத்தியான இந்த நச்சுப்பொருளே யானைகளின் மரணத்திற்கு காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.