கொரோனாவுக்கான கோவாக்ஸ் தடுப்பூசி திட்டத்தில் 156 நாடுகள் இணைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 64 வசதிபடைத்த மற்றும் சுயசார்பு நாடுகள் ஆகியவையும் இத்திட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை சரியான முறையில் விநியோகிக்க, உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ள திட்டமே கோவாக்ஸ் ஆகும்.
இத்திட்டத்தின் மூலம் 2021ம் ஆண்டு இறுதிக்குள், உலகெங்கிலும் 2 பில்லியன் அளவிலான பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசிகளை வழங்குவதை, உலக சுகாதார அமைப்பு இலக்காக நிர்ணயித்துள்ளது.