குளிர்காலங்களில் கொரோனா பரவல் முன்பை விட அதி வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
அந்த அமைப்பின் அவசரகால திட்டத்தின் தலைவரான மைக் ரியான், குளிர்காலம் நெருங்கும் நிலையில், வெப்பநிலை குறைந்து வருவதால் கொரோனா முன்பை விட மின்னல் வேகத்தில் அதிக அளவில் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.
முதல் முறை பரவியதை விட மோசமாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். 2021 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை, தடுப்பூசி மருந்து பயன்பாட்டிற்கு வரும் சாத்தியமில்லை. என்று மைக் ரியான் தெரிவித்தார்.