பெர்முடா தீவை நோக்கி நகர்ந்து வரும் டெடி புயல், கடல் சீற்றம் அதிகரித்து, ராட்சத அலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகி உள்ள டெடி புயல், பெர்முடா வழியாக, கனடாவின் நோவா ஸ்கொட்டியாவுக்கு (Nova Scotia) நகரும் என்று கணித்துள்ள அமெரிக்க தேசிய சூறாவளி மையம், இதனால் கிழக்கு கடற்கரையோரங்களில் மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
மேலும், அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்கு மற்றும் வடமேற்கு கரையோரங்களில் பல நாட்களுக்கு டெடி புயல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கரீபியன் நேஷனல் வீக்லி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.